Tamilcube.com

Tamil astrology horoscope predictions for 2013-2014 : விஜய வருட ராசி பலன்கள்

Mesham - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - மேஷம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Mesham உங்கள் ராசியில் கேதுவும், ராசிக்கு 7ம் இடத்தில் சனியுடன் ராகுவும் இருக்கிறார்கள். நல்ல செயல்களை செய்து சிறப்படைவீர்கள். உங்கள் பெயரும் புகழும் வளரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வயோசித்து முடிவெடுப்பீர்கள். பெற்றோரின் நல்லாதரவு உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையை காண்பீர்கள்.

பணப்புழக்கம் அதிகமாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களுடன் நட்போடு பழகுவார்கள். வியாபாரத்தைப் பெருக்க புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். உங்களின் வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை சென்றடையும். விவசாயிகளுக்கு தானியப் பொருட்களின் உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும். சந்தைகளில் போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் சமுதாயப்பணி செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

Rishabam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - ரிஷபம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Rishabam இந்த புத்தாண்டில் உங்கள் ராசியில் குருவும், ருணரோக சத்ரு ஸ்தானத்தில் சனி-ராகுவும், விரய ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். உங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயரும் புகழும் உயரும். தீயவர்களின் தொடர்பு தானா கவே விலகும். எந்தச் செயலை செய்தாலும் அதில் உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தங் களை செய்வீர்கள். ஆனாலும் மனதில் காரணமில்லாத பயம் தொடரும். சகோதர, சகோதரிகள் காரணமில்லாமல் விரோதம் பாராட்டுவார்கள். கடினமான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

அரசாங்கத்திலி ருந்து எதிர்பார்த்த சலுகைகள் உங்களை வந்தடையும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் பலனடைவீர்கள். உத்தியோ கஸ்தர்கள் உண்மையான உழைப்பை மேற்கொள்ளவும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வும், பதவி உயர்வும் சிறிய கால தாமதத்திற் குப் பிறகே கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களை சாதனைகளாக மாற்றிக் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளை குவிப்பீர்கள்.

Midhunam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - மிதுனம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Midhunam இந்த விஜய தமிழ்ப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும், விரய ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் செயல்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உங்கள் விருப்பங்களும் தேவைகளும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் அறிவுரைகளை கேட்டு முடிவெடுப்பீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம்.

உங்கள் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும். உத்தி யோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து செயல்களில் வெற்றிபெற்று நற்பெயர் வாங்குவீர்கள். மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு லாபகரமாகவே அமையும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கலைத்துறையினரின் புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தினரிடம் உங்களின் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சிலர் புதிய வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

Kadagam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - கடகம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Kadagam இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சனியும் ராகுவும் தொழில் ஸ்தானத்தில் கேதுவும் லாப ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பங்காளிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். குழந்தைகள் உங்களின் சொல் கேட்டு நடப்பார்கள். செய்தொழிலில் தொடர்ந்து வளர்ச்சியை காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி நல்ல வருமானத்தை காண்பீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அநாவசி யச் செலவுகளை செய்ய நேரிடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்மணி கள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். மாணவ மணிகளுக்கு பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

Simmam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - சிம்மம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Simmam இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனியும் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும் தொழில் ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். சிறிய அளவு முயற்சிகள் கூட பெரிய பலனைத் தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். மனதிற்கினிய தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேருவார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். விவசாயிகள் கொள்முதல் லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினருடன் ஒற்றுமை தொடரும். மாணவமணிகளின் படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள்.

Kanni - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - கன்னி : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Kanni இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சனியும் ராகுவும், ஆயுள் ஸ்தானத் தில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும். எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தை காண்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு ரியல் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். காலம் கனிந்து வருவதால் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருமானத்தை பெருக்குவீர்கள்.

வருங்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாரா கவே இருக்கும். ஆனாலும் கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள்.

Thulam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - துலாம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Thulam இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்குள் சனியும் ராகுவும் 7ம் இடத்தில் கேதுவும் ராசிக்கு 8ம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள். ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும்.

பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். விவசாயிகள் நூதன யுக்திகளை புகுத்தி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். அரசியல்வாதிகள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள். பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளை காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

Viruchigam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - விருச்சிகம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Viruchigam இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் கேதுவும் ராசிக்கு 7ம் இடத்தில் குருவும் விரய ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்னை தீர வழிகளை காண்பீர்கள். சிலருக்கு பல், அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருக்கடிகளை தாண்டி வேலைகளை சரியாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான பயணங்களைச் செய்வீர்கள். வீட்டிற்கு பராமரிப்பு செலவுகளும் வாகனங்களை பழுது பார்க்கும் செலவுகளும் உண்டாகும். பொது வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை செய்யத் தொடங்குவீர்கள்.

பணவரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் இந்த நந்தன ஆண்டில் எதிர்பார்த்த லாபத்தை காண முடியாது. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களை காண்பீர்கள். கலைத்துறையினர் சிறப்பான புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்களுடன் விருந்து,கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.

Dhanusu - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - தனுசு : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Dhanusu இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பஞ்சம, பூர்வ, ஸ்தானத்தில் கேதுவும் ராசிக்கு 6ம் இடத்தில் ராசிநாதனான குருவும் லாப ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும். இன்முகத்துடன் வலம் வருவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பணப் புழக்கத்தில் பின்னடைவுகள் ஏற்படாது. எவருக்கும் ஜாமீன் போட்டு கடன் வாங்கித் தர வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களை பெறுவீர்கள்.

வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகரித்தாலும் லாபம் குறைவாகவே கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினருக்கு விருது களும் பாராட்டுகளும் கிடைக்கும். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உடல் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. மாணவமணிகள் நல்ல முறையில் படித்து மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள்.

Makaram - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - மகரம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Makaram இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் கேதுவும் ராசிக்கு பஞ்சம, பூர்வ புண்ணிய இடத்தில் குருவும் தொழில் ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். உங்களின் செய்தொழிலில் எதிர்பாராத லாபத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். சோதனைகளை சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். பொதுநலத் தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். கடுமையாக உழைத்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கேற்ப உதவுவார்கள். ஷேர் மார்க்கெட் போன்ற துறை களின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின் அலுவலக வேலைப்பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சிலர் வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். சேமிப்புகள் உயரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள்.

Kumbam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - கும்பம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Kumbam இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் கேதுவும் ராசிக்கு சுக ஸ்தானத்தில் குருவும் பாக்கிய ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடலில் ஏற்பட்ட உபாதைகள் நீங்கி மிடுக்குடன் நடப்பீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். அசையாச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத் தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களை செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். ஆனா லும் உற்றார், உறவினர்கள் அனுகூலமாக இருக்க மாட்டார்கள். அனாவசியப் பேச்சுகளை தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கடுமையாக முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றி வாகை சூடுவீர்கள்.

Meenam - Tamil horoscope preditions for 2013, Vijaya Tamil year - மீனம் : விஜய வருட ராசி பலன்

Tamil jothidam 2013 for Meenam இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் குருவும் அஷ்டம ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். உங்கள் செயல்களால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் பயனடைவீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள். பெற்றோர் வகையில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். அவர்களின் நீண்ட நாளைய உடல் உபாதைகள் மறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளால் நன்மைகளை பெறுவீர்கள். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசியல் வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும்.எதிர்க்கட்சியினரும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் உண்டாகும். மற்றபடி உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியாமல் போகலாம்.

Related Tamil astrology resources from Tamilcube


Do you have a question? Or, do you have the knowledge to answer questions on this topic? To ask and answer questions, visit Tamilcube Forum now!

Tweet
Share on Google+