Sani Peyarchi 2026

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் இப்போது மிதுனம் ராசியில் அமர்ந்துள்ளார்.

தமிழ் ஜோதிடத்தில் சனி முக்கியமான கிரகங்களில் ஒன்று. சனி ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி பெயர்ச்சியாவது முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எவ்வாறு பலன் தரும் என்பதை அறிய, கீழே உங்கள் ராசியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும்.

2026 - 2028 சனி பெயர்ச்சி எப்போது?

சனி பகவான் ரிஷபம் ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பஞ்சாங்க முறைப்படி பெயர்ச்சி நாள்:

  • வாக்கிய பஞ்சாங்கம்: 6th March 2026
  • திருக்கணித பஞ்சாங்கம்: 27th March 2025
மேஷம் மேஷம் 3-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு தன-வாக்கு-குடும்ப ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது தைரிய-வீர்ய ஸ்தானமான 3-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, மாறுகிறார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் ருண-ரோக-சத்ரு ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"மூன்றில் சனி வந்தால் முன்னேற்றம் கூடுமென்பார்! வேண்டுகிற தத்தினிலே, வீடு, மனை சுகம் வாய்க்கும்! தோன்றும் புதிய தொழில், தொகை-வரவும் அதிகரிக்கும்! காண்பவர்கள் போற்றும் விதம், காசினியில் பதவி வரும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஏழரை சனி விலகிவிட்டதால், ஒரு அற்புதமான காலத்தை அனுபவிக்கலாம். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். புதிய முயற்சிகள், அதிக லாபம் என நீங்கள் நற்பலன்களை அனுபவிக்கலாம். திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு உட்பட சுப காரியங்கள் பல நடக்கும் நேரம் இது. பிள்ளைகளால் பெருமை கிட்டும்.

உடல் நிலை சீராகும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவீர்கள். புதுவீடு கட்டும் திட்டம் நிறைவேறும். கடன் பிரச்சினை ஒழியும். வழக்குகள் சாதகமாய் முடியும்.

குடும்ப சச்சரவு தீரும். பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். பூர்வீகச் சொத்துக்கள் வந்துசேரும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடிவரும்.

வேலைப்பளு குறையும். விரும்பியபடி இடமாற்றம் கிட்டும். தொழிலில் போட்டி குறையும். நல்ல லாபம் கிட்டும். புதிய தொழில் தொடங்குவதைத் தள்ளி வைப்பது நல்லது.

கடன் கொடுப்பதில் கவனம் தேவை. ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

ரிஷபம் ரிஷபம் 2-ஆம் வீடு

உங்கள் ஜென்ம ராசியில், ஜென்மச்சனியாக இருந்த சனி பகவான் இப்போது தன-வாக்கு-குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, பாதச்சனியாக மாறுகிறார். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய சுக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"இரண்டில் சனி நின்றால் எண்ணற்ற லாபம் வரும்! வறண்ட பாறையிலும் வற்றாத நீர் ஊறும்! திரண்ட செல்வமுடன் தித்திக்கும் வாழ்வமையும்! பரந்த உலகத்தில் பதவிகளும் வந்திடுமாம்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஏழரை சனியின் ஜென்மச் சனி பகுதியை கடந்துவிட்டதால், இறுதிப் பகுதியான பாதச் சனி இந்த 2½ ஆண்டுகளுக்கு நடை பெறப்போகிறது. இருப்பினும், உச்ச குருவின் பார்வையால் பாதகம் குறைவாகவே இருக்கும்.

கடந்தகால சங்கடங்கள் மாறும். பாக்கிகள் வந்துசேரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். இருப்பினும், வரவுக்கு மேல் செலவுகள் ஏற்படும். கடன்களாலும் பிரச்சினைகள் ஏற்படும். சொத்து வழக்குகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். பணியில் மற்றும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். அதிக உழைப்பிருக்கும். ஆனாலும், குறைந்த லாபமே கிட்டும். மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். அரசாங்க உதவி கிட்டும்.

பெற்றோர் ஆதரவு கிடைக்கும். சகோதர உறவில் சிக்கல் ஏற்படும். குடும்பத்தினரின், குறிப்பாக, தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் நிமித்தம் குடும்பத்தை பிரிந்து தொலை தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

வாகன பயணத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேச்சில் கவனம் தேவை.

மிதுனம் மிதுனம் 1-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில், விரயச்சனியாக இருந்த சனி பகவான் இப்போது உங்கள் ஜென்ம ராசியான விருச்சிக இராசிக்கு ஜென்மச்சனியாக மாறுகிறார். உங்கள் ராசிக்கு தைரிய-வீர்ய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய தைரிய-வீர்ய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் கர்ம-ஜீவன ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"ஜென்மத்தில் சனி வந்தால் சிக்கல்களே வரும் என்பார்! எச்சரிக்கை யோடிருந்தால் எந்நாளும் இன்பம் வரும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஏழரை சனியின் விரயச் சனிப் பகுதியைக் கடந்து, அடுத்த பகுதியான ஜென்மச் சனி நடை பெறப்போகிறது. ஏழரை சனி இரண்டரை வருடம் மட்டும் முடிந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் மீதி உள்ளது. இந்த இரண்டரை வருடம் சோதனையான காலம். இருப்பினும், உச்ச குருவின் பார்வையால் பாதகம் குறைவாகவே இருக்கும்.

செய்யும் எந்தக் காரியத்திலும் நிதானம் தேவை. திருமணம், குழந்தைபேறு என்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய சொத்துக்கள் சேரும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். கணவன்-மனைவியிடையே சண்டை சச்சரவு ஏற்படும். தாய்க்கு உடல் நிலை பாதிக்கலாம்.

உத்தியோகத்தில் விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். வேலையிடத்தில் மேலதிகாரியுடன் பிரச்சினை ஏற்படலாம். பொறுமை தேவை. உத்தியோக மாற்றம் அல்லது புதிய தொழில் துவங்குதல் போன்ற முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நலம். தொழில் பாதிப்பு ஏற்படலாம். கடன்களால் நிம்மதி குறையும். கௌரவம், அந்தஸ்துக்குச் சோதனையான காலம். எதிலும் அமைதியாகவும், கவனமாகவும் செயல்படுவது ஏற்றம் தரும்.

தேவை இல்லா மனக்குழப்பம் உண்டாகும். அடுத்தவர் செய்யும் தவறுக்கு நீங்கள் குற்றம் சுமத்தப்படலாம். தீயினால் சிலருக்குச் சேதம் உண்டாகலாம். கடன் தொல்லையால் துன்பப்பட வேண்டி வரலாம். கவனம் தேவை.

கடகம் கடகம் 12-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது விரய ஸ்தானமான 12-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, விரயச்சனியாக மாறுகிறார். உங்கள் தன-வாக்கு-குடும்ப ஸ்தானம், மற்றும் தைரிய-வீர்ய ஸ்தானங்களுக்கு அதிபதியுமான அவர், உங்களுடைய தன-வாக்கு-குடும்ப ஸ்தானம், ருண-ரோக-சத்ரு ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"பனிரெண்டில் சனி வந்தால், பயணத்தால் பலன் கிடைக்கும்! இனி அமையும் புதிய தொழில் லாபத்தை உருவாக்கும்! அணி திகழும் ஈஸ்வரனை அன்றாடம் வழிபட்டு, துணிவோடு செயல்பட்டால் தொடர்ந்து வரும் நலம் யாவும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஏழரைச் சனியின் ஆரம்ப கட்டமாக விரயச்சனி தொடங்குகிறது. இருப்பினும், உச்ச குருவின் பார்வையால் பாதகம் குறைவாகவே இருக்கும்.

பொருளாதார சிக்கல்களும், குடும்பத்திலும், அலுவலகத்திலும் பிரச்சினைகள் தோன்றும். வருமானம் திருப்திகரமாக இருக்காது. பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை. பிளைகளின் திருமணம் முடியும். வாகனச் செலவுகள் அதிகரிக்கும்.

பணியில் அதிக வேலைப்பளு இருக்கும். பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் அதிகக் கவனம் தேவை. ஏற்றமதி-இறக்குமதியில் லாபம் வரும். தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நலம். புதிய தொழில் தொடங்குவதையும், விரிவாக்கத்தையும் தள்ளிப் போடுவது நல்லது. அடிக்கடி வெளியூர்ப் பயணம் ஏற்படும்.

செய்யாத தவறுக்கு நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். பேச்சில் கவனம் தேவை. சொத்து வாங்குவதில் பிரச்சினைகள் வரலாம். ஷேர் மார்க்கெட்டைத் தவிர்ப்பது நல்லது. எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனநிலையே உங்களுக்கு இப்போது தேவை.

சிம்மம் சிம்மம் 11-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு கர்ம-ஜீவன ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது லாப ஸ்தானமான 11-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, மாறுகிறார். உங்கள் ஜென்ம ராசி ஸ்தானம் மற்றும் தன-வாக்கு-குடும்ப ஸ்தானங்களுக்கு அதிபதியான குரு பகவான், உங்களுடைய ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"பதினொன்றில் சனி வந்தால் பண வரவு அதிகரிக்கும். மதிப்பு மிகும், சமூகத்தில் மரியாதை மிகக்கூடும். நதிபோல துயர் ஓடும். நலம் யாவும் தேடிவரும், விதிப் பயனால் எதிர்பார்க்கும் வெளிநாட்டு யோகம் வரும்" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். குடும்பத்தில் குழப்பங்கள் மறைந்து, மகிழ்ச்சி நிலவும். உடல் நலம் மேம்படும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். குழந்தை செல்வம் உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். பிள்ளைகளால் பெருமை கிட்டும்.

உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். உழைப்பிற்கேற்ற மதிப்பு தேடி வரும். தொழில் மற்றும் வேலையில் இருந்த மந்த நிலை மாறி லாபம் பெருகும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பொற்காலம். நீங்கள் நல்ல வருமானத்தையும், அதிக முன்னேற்றத்தைக் காணலாம். நண்பர்களின் உதவி கிட்டும். வழக்குகள் சாதகமாகும்.

சமூகத்தில் மதிப்பு உயரும். பெரிய மனிதர்களுடன் சேர்ந்து செயலாற்ற வாய்ப்புகள் வரும். வெளிநாட்டுப் பயணம் மூலம் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

உடல்நலனில் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் தேவை. சொத்து வாங்குவதிலும் கவனம் தேவை. வீண் விரோதம் தவிர்க்கவும்.

கன்னி கன்னி 10-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது கர்ம-ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, மாறுகிறார். உங்கள் ஜென்ம ராசி மற்றும் விரய ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய சுக ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"பத்தில் சனி வந்தால் பார்போற்றும் நிலை அமையும்! மெத்தவே சுகம் கிடைக்கும்! மேலோரின் பாசம் வரும்! பெற்றவரின் பாசம் வரும்! பிள்ளைகளும் ஒத்து வரும்! முத்தான சனியதனை முறையாக வழிபடுவீர்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

10-ம் இட சனி பகவான், நல்ல யோகத்தை தருவார். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். கடன் சுமை தீரும். பொன், பொருள், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. தான தர்மங்கள் செய்வீர்கள். புதிய பதவிகள் தேடிவரும்.

தடைகள் நீங்கித் திருமணம் நடந்தேரும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனை தீரும். மனைவிவழி உறவுகளிடம் எச்சரிக்கை தேவை. சகோதர ஒற்றுமை வளரும்.

பணியாளர்களுக்கு பதவி உயர்வும், பணிமாற்றமும் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கும், திறமைக்கும் உயரதிகாரிகளின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். தொழிலில் நல்ல விருத்தியடைந்து, அதிக லாபம் கிட்டும். போட்டி குறையும். அடிக்கடி பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும்.

உடல் நலனில் அக்கறை தேவை. வீடு மற்றும் வாகன விஷயங்களில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை.

துலாம் துலாம் 9-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, மாறுகிறார். உங்கள் விரய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய தைரிய-வீர்ய ஸ்தானம், ருண-ரோக-சத்ரு ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"ஒன்பதில் சனி வந்தால் உயர்வுகள் வந்து சேரும்! பண்பிலார் பழக்கம் மாறும்! பகையெல்லாம் விலகி ஓடும்! நண்பர்கள் அதிகம் சேர்வர்! நல்லதோர் பதவி வாய்க்கும்! கண்படும் விதத்தில் உங்கள் கனிவான வளர்ச்சி கூடும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அஷ்டம சனியில் இருந்து விடுபடும் நேரம். பொதுவாக பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சனி பகவான், சகல பாக்கியங்களையும் அள்ளிக் கொடுப்பார். நீங்கள் இனி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்ததைத் துணிந்து செய்வீர்கள். நீண்டகால நோய் நீங்கி, உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுபச்செலவுகள் ஏற்படும். குழந்தைப்பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் அமையும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடி, வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வும், விரும்பியபடி இடமாற்றமும் கிட்டும். தொழிலில் அதிக லாபம் கிட்டும். பாக்கிகள் அனைத்தும் வந்துசேரும். போட்டி குறையும். தொழிலை விரிவாக்கமும் செய்வீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.

பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. வீண் விவாதம் வேண்டாம். சொத்து விஷயத்திலும், மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் கவனம் தேவை.

விருச்சிகம் விருச்சிகம் 8-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு களத்திரஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது ஆயுள் ஸ்தானமான 8-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, மாறுகிறார். உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய ஜீவன ஸ்தானம், தன-வாக்கு-குடும்ப ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"எட்டில் சனி வந்தால், எதிர்பாரா மாற்றம் வரும்! பெட்டிப் பணத்திற்கும் பெரும் விரயம் காத்திருக்கும்! ஓட்டும் உறவெல்லாம், ஒதுங்கிவிடும் என்றாலும், வெற்றி வர சனியதனை, விரும்பி வணங்கிடுவீர்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

'அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி' என்பது பழமொழி. இருப்பினும் உச்ச குருவின் பார்வையால், முதல் ஒன்றரை வருடங்கள் அதிகப்பாதிப்புகள் இல்லாமல் இருக்கும். மீதமுள்ள ஒரு வருடம் கவனம் தேவை.

பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனால் கடன் வாங்க நேரிடும். உடல் நிலையில் சற்று கவனம் தேவை. கணவன் மனைவியிடையே மனக்கசப்பு ஏற்படும். தாய் தந்தையரின் உடல் நிலை பாதிக்கப்படலாம்.

பொறுப்புகள் கூடும். உழைப்பு அதிகரிக்கும். இருப்பினும், முன்னேற்றத்தில் தடங்கல்களும், அதிகாரம் மிக்கவர்களிடம் மனகசப்பும் உண்டாகி மறையும். தொழிலில் லாபம் எதிர்பார்க்க முடியாது. பேச்சில் கவனமும், நிதானமும் தேவை. இடமாற்றமும் தொழில் மாற்றமும் ஏற்படும். அரசாங்கத்துக்கு அபராதம் கட்டும் நிலை ஏற்படலாம்.

சொத்தில் சில பிரச்சனைகள் வந்து பின் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் தேவை. வேலை வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். வழக்குகளில் விடுதலை கிட்டும். ஆரோக்கியம் கூடும். குல தெய்வ அருள் கிட்டும்.

புதிய தொழில் தொடங்குவது போன்ற முயற்சிகளையும், திருமணப் பேச்சுக்களையும் அஷ்டம சனி விலகும் வரை ஒத்திபோடுவது நல்லது.

தனுசு தனுசு 7-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு ருண-ரோக-சத்ரு ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது களத்திர ஸ்தானமான 7-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, கண்டச் சனியாக மாறுகிறார். உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான அவர், உங்களுடைய தர்ம ஸ்தானம், ஜென்ம ராசி, சுக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

உங்கள் ராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி பகவான் யோகத்தையே செய்வார்; கெடுதல் செய்ய மாட்டார். 10-க்குரிய சனி, 7-ல் கண்டச் சனியாக வருவது யோகத்தையே தரும்.

"ஏழில் சனி வந்தால் எண்ணற்ற மாற்றம் வரும்! சூழும் பகை விலக, துணிவோடு செயல் புரிய, நாளும் பொழுதுமினி, நல்லதே நடப்பதற்கு, வாழ்வில் ஈஸ்வரனை வழிபட்டால் பலன் கிட்டும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

களத்திர ஸ்தானத்திற்கு சனி மாறுவதால், கணவன் - மனைவிக்கிடையே புரிந்துணர்வு குறையும். மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

குடும்பத்தில் பணப்புழக்கம் குறைவாகவே காணப்படும். குடும்பத்தில் நிம்மதிக் குறைவும், மனக்கசப்பும் ஏற்படும். பெற்றோர் உடல் நலம் பாதிக்கப்படலாம். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும்.

வேலை மற்றும் தொழிலில் இனம் புரியாத பயமும், கவலையும் சிலருக்கு ஏற்படும். தொழிலில் கடன் ஏற்படும். சிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக அமையும்.

சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பிரயாணம் செய்யும்போது நிதானம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை.

மகரம் மகரம் 6-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது ருண-ரோக-சத்ரு ஸ்தானமான 6-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, மாறுகிறார். உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய தைரிய-வீர்ய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"ஆரில் சனிவந்தால், ஆதாய வரவுண்டு! சீரும் சிறப்பும் வரும்! செல்வாக்கும் கூடி வரும்! போராட்டம் வெற்றிபெறும்! புது வீடுமனை வாய்க்கும்! கூர்மதியால் செல்வம் வரும்! குடும்பத்தில் மதிப்பு உயரும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ராசிக்கு 3,6,11-ல் சனி அமர்வது இராஜயோகம் தரும். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான பெயர்ச்சி. நினைத்த காரியத்தை நடத்தி தந்து, மறைந்த சனி நிறைந்து கொடுப்பார். மேலும், முதல் ஒரு வருடத்திற்கு இரண்டாம் வீட்டு உச்ச குருவும் உங்களுக்கு நன்மைகளையே வழங்குவார்.

சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் தடையின்றி நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாகனம் வங்குவீர்கள். கடன்பட நேரும். இதனால், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம்.

பணியாளர்களுக்கு பதவியுயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிட்டும். மேல்அதிகாரிகளிடம் பணிவைக் கடைப்பிடிப்பது நலம். தொழிலில் அதிக முன்னேற்றம் ஏற்படும். பாக்கிகள் வதூலாகும். போட்டி குறையும். புதிய தொழில் தொடங்குவதையும், விரிவுபடுத்துவதையும் தள்ளிவைப்பது நல்லது. வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிட்டும். சமூகத்தில் நல்ல மதிப்பு ஏற்படும்.

மருத்துவச் செலவுகள் கூடும். சொத்துக்கள் வாங்குவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். பொறுமையைக் கடைபிடியுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். சகோதர, சகோதரி வசம் வீண் விவாதம் வேண்டாம்.

கும்பம் கும்பம் 5-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, மாறுகிறார். உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய களத்திர ஸ்தானம், லாப ஸ்தானம், தன-வாக்கு-குடும்ப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"பாக்கியத்தில் சனி வந்தால் பல விதத்தில் மாற்றம் வரும்! தாக்குதல்கள் அகன்று விடும்! தனவரவு கூடிவரும்! கூக்குரல்கள் இனிமாறும்! குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்! தேக்கநிலை இனி அகலும்! தெய்வ அருள் இனி கிடைக்கும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அர்த்தாஷ்டம சனி விலகி விட்ட நிம்மதி கிடைக்கும். பொதுவாக, பஞ்சமச் சனி நன்மையே செய்வார். எல்லாமே வெற்றிகரமாக நடந்தேறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வு கிட்டும். புதிய வாகனம், வீடு-மனை வாங்குவீர்கள்.

வெளிநாட்டு பயணம், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிய யோகங்கள் உண்டு. பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். மனைவியின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

வேலையில் உள்ளவர்கள் நல்ல இடம் மாறுவார்கள். பதவி உயர்வு கிட்டும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வேறு தொழில் செய்ய வழி கிட்டும். அரசாங்க ஆதரவில் காரியங்கள் நன்மையாக முடியும்.

கோவில் காரியங்களை ஏற்றுச் செய்வீர்கள். வேலை விஷயமாக குடும்பத்தைப் பிரிந்து தொலை தூரத்தில் வசிக்க நேரிடலாம். சொத்து விவகாரங்களால் அலைச்சல் ஏற்படலாம். பேச்சில் நிதானம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

மீனம் மீனம் 4-ஆம் வீடு

உங்கள் ராசிக்கு தைரிய-வீர்ய ஸ்தானத்திலிருந்து சனி பகவான் இப்போது சுக ஸ்தானமான 4-ஆம் வீடு, அதாவது, விருச்சிக இராசிக்கு, அர்த்தாஷ்டம சனியாக மாறுகிறார். உங்கள் ராசிக்கு ருண-ரோக-சத்ரு ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானங்களுக்கு அதிபதியான அவர், உங்களுடைய ருண-ரோக-சத்ரு ஸ்தானம், கர்ம-ஜீவன ஸ்தானம், ஜென்ம ராசி ஆகியவற்றைப் பார்க்கிறார்.

"நாலில் சனி வந்தால், நலம் வருமா? எனக் கேட்பீர்! கோள்களிலே சனியதனை, கும்பிட்ட மாந்தர்க்கு, நாளும் வளம் கிடைக்கும்! நட்பெல்லாம் கைகொடுக்கும்! ஊர்மாற்றம், இடமாற்றம் உடன்வந்தே மகிழ்ச்சி தரும்!" என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும், குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், ஆனந்தத்தையே தருவார்.

தொட்டது துலங்கும். வீடு, வாகன வசதிகள் கிட்டும். திருமணத்தடை நீங்கும். பிள்ளைகளால் நற்பலன் கிட்டும். உறவினர்களுடனான பிணக்குகள் தீரும். கடன் தொல்லை ஒழியும். நோய் தீரும். பகைவர்கள் அடங்குவர். வழக்குகள் சாதகமாக அமையும். கைவிட்டுப்போன பொருட்கள் வந்து சேரும்.

நல்ல உத்தியோகம் கிட்டும். அல்லது, உத்தியோகத்தில் நல்ல இடமாற்றம் ஏற்படும். பணியில் நிதானம் தேவை. வெளிநாட்டுப் பயணம் திட்டமிட்டபடி நிறைவேறும். சொந்ததொழில் செய்யும் யோகம் கிட்டும். தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும்.

குடும்பத்தினரின் உடல் நிலையில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சனையில் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஏதேனும் வழக்கு விஷயமாய் அலைச்சல் ஏற்படும். யாரிடத்திலும் விரோதம் வளர்க்க வேண்டாம். ஆடம்பரச் செலவுகள் வேண்டாம்.